உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு?

ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் நடித்து இந்த வருடம் வெளிவந்த திரைப்படம் 'கூலி'. இப்படம் 600 கோடிக்கு அதிகமாக வசூலித்தது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவல். இருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதற்கு முன்பு வெளிவந்த பெரும் வெற்றிப் படமான கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படம் அளவிற்கு இல்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.

படத்தின் வசூல் இன்னும் அதிகமாகாமல் போனதற்கு படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்ததும் ஒரு காரணம் என ரஜினிகாந்த் நினைக்கிறாராம். தீபாவளிக்கு இப்படத்தை டிவியில் ஒளிபரப்பிய போது டிவிக்காக மறு சென்சார் செய்து 'யுஏ' சான்றிதழ் பெற்றுதான் ஒளிபரப்பினார்கள். அது போல 'யுஏ' சான்றிதழுடன் தியேட்டர்களில் வெளியாகி இருந்தால் குடும்பத்தினர் பலரும் வந்து படத்தைப் பார்த்திருப்பார்கள்.

'கூலி' படத்திற்கு முன்பாக 1989ல் வெளிவந்த 'சிவா' படம்தான் 'ஏ' சான்றிதழ் பெற்ற படம். சுமார் 36 ஆண்டுகள் 'ஏ' சான்றிதழ் பெறாத வகையில் கதைகளைத் தேர்வு செய்து ரஜினிகாந்த் நடித்து வந்தார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அவர் சொன்ன கதை மீண்டும் ஒரு 'கேங்ஸ்டர்' கதை, அதற்கு 'ஏ' சான்றிதழ் கிடைத்தாலும் கிடைக்கலாம் என ரஜினிகாந்த் அக்கதை வேண்டாம் என சொன்னதாக ஒரு தகவல் கோலிவுட்டில் சுற்றி வருகிறது.

நகைச்சுவை கலந்த, குடும்பப் பாங்கான கதைதான் ரஜினியின் தேர்வாக இருக்கிறதாம். அம்மாதிரியான கதையைக் கொண்டு வரும் இயக்குனர்களுக்கு முன்னுரிமை கொடுக்க ரஜினிகாந்த் தயாராக இருக்கிறாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !