பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை
ADDED : 46 days ago
கன்னட சினிமாவில் 'மகிரா', 'டோபி', 'சப்த சாகரடச்சி எலோ', 'பிலின்க்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சைத்ரா ஆச்சர். சமீபத்தில் இவர் தமிழில் '3 பிஎச்கே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து தெலுங்கு சினிமாவிலும் இவர் அறிமுகமாகிறார்.
தி ராஜா சாப் படத்தில் நடித்துள்ள பிரபாஸ் அடுத்து ஹனு ராகவபுடி இயக்கத்தில் 'பௌஸி' என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சைத்ரா நடிக்கிறார். பெளசி படத்தின் போஸ்டரை இன்ஸ்டாவில் பகிர்ந்து, இந்த படத்தில் இணைவது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார் சைத்ரா.