உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால்

தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால்

அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள படம் 'ஆர்யன்'. வரும் அக்டோபர் 31ம் தேதி அன்று படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி விஷ்ணு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது ராயன் படத்தில் சந்தீப் கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. தனுஷ் என்னிடம் இதுபற்றி பேசினார். என் கதாபாத்திரம் தொடர்பாக சில மாறுதல்கள் கூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு அந்த மாற்றத்தையும் செய்தார். அதன் பின்னர் உடனடியாக படப்பிடிப்பிற்கு தேவையான கால்ஷீட் அந்த காலகட்டத்தில் என்னால் தர முடியவில்லை. இதனால் ராயன் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !