உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார்

ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார்

பிரபல ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா, 74 உடல்நலக் குறைவால் மும்பையில் காலமானார். சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த இவர் மும்பையில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(அக்., 25) அவரது உயிர் பிரிந்தது.

ஹிந்தியில் ‛அரவிந்த் தேசா கி ஆஜிப் தஸ்தன்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் பெரும்பாலும் காமெடி கலந்த குணச்சித்ர வேடங்களில் தான் அதிகம் நடித்தார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சீரியல்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். குறிப்பாக 2004ல் இவர் நடித்த சாராபாய் வெசஸ் சாராபாய் என்ற சீரியல் இவரை இன்னும் பிரபலமாக்கியது.

இவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஞாயிறு அன்று இவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !