உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் !

தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் !


‛குபேரா, இட்லி கடை' படங்களைத் தொடர்ந்து தற்போது ‛தேரே இஸ்க் மெய்ன்' என்ற ஹிந்தி படத்தில் நடித்துள்ளார் தனுஷ். அதையடுத்து ‛போர் தொழில்' என்ற படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கும் தனது 54வது படத்தில் நடிக்க போகிறார். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் இப்படம் குறித்து ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், ‛இது ஒரு பிளாக்பஸ்டர் படம். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் ரெக்கார்டிங் பணிகள் நடைபெற்று வருகிறது. என்னுடைய சமீபத்திய படைப்புகளில் நம்பிக்கைக்குரிய இயக்குனர் மற்றும் சைலன்ட் கில்லர்' என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !