கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1'
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் வெளிவந்த கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1' படம் 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மூன்று வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் முதன் முதலில் 200 கோடி வசூலைக் கடந்த படம் என சமீபத்தில் ஒரு புதிய சாதனையைப் படைத்திருந்தது. தற்போது மற்றுமொரு சாதனையாக 250 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் மட்டுமே இப்படம் 700 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் 100 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துள்ளது.
ஒரே மாநிலத்தில் 250 கோடி வசூலைக் கடந்த படங்களாக 'ச்சாவா' படம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் 330 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதே மாநிலத்தில் 256 கோடி வசூலித்து 'புஷ்பா 2' இரண்டாமிடத்தில் உள்ளது.
ஒரே மாநிலத்தில் அதிக வசூல் பிடித்த படங்களில் 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் வசூல் விரைவில் 'புஷ்பா 2' வசூலை முறியடிக்கும் வாய்ப்பிருக்கிறது.