ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி!
ADDED : 43 minutes ago
கடந்த 2009ம் ஆண்டில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா,சந்தானம் நடித்து வெளியான படம் 'சிவா மனசுல சக்தி' . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
சமீபத்தில் கிட்டத்தட்ட16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜீவா, எம், ராஜேஷ், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இந்த படத்தை மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்டீரிம்ஸ் என்கிற பிரபல விநியோகஸ்தர் தயாரிக்கின்றார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளனர். இது ஜீவாவின் 47வது படமாக உருவாகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக இளம் நாயகி இவானா இணைந்துள்ளார் என்கிறார்கள். இவர் ‛நாச்சியார், லவ் டுடே, கள்வன்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.