உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா!

'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா!


'குஷி' படத்திற்கு பிறகு வெப் சீரியல்களில் நடித்து வந்த சமந்தா, தற்போது ஏற்கனவே தன்னை வைத்து 'ஓ பேபி' என்ற படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்கத்தில் 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். ஆக்சன் கதையில் உருவாகும் இப்படத்தை சமந்தாவே தயாரிக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்காக கடந்த சில மாதங்களாகவே தீவிரமான ஒர்க் அவுட்டில் ஈடுபட்டு வந்தார் சமந்தா. இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள ஜிம்மில் தான் ஒர்க்அவுட் செய்யும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், கண்ணாடி முன்பு உடற்பயிற்சி செய்யும் போது தனது முதுகு மற்றும் தோள்களை காட்டும் ஒரு புதிய படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, கட்டமைக்க கட்டமைக்க என்றும் ஒரு பதிவு போட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !