தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா?
ADDED : 9 hours ago
சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்தின் புரோமோ வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் நவம்பர் முதல் வாரத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. மேலும் இரண்டே மாதங்களில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட திட்டமிட்டுள்ள இயக்குனர் வெற்றிமாறன், அதையடுத்து இரண்டு மாதங்களில் இறுதிக்கட்ட பணிகளை முடித்துவிட்டு, தமிழ் புத்தாண்டு தினத்தில் 'அரசன்' படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும், ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படமும் இதே தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவும், சிம்பும் நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பது தெரியவந்துள்ளது.