64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான படம் 'குட் பேட் அக்லி'. அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். என்றாலும் அதையடுத்து கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டார்.
கடந்த நான்கு மாதங்களாக வெளிநாடுகளில் முகாமிட்டிருந்த அஜித்குமார் அவ்வப்போது முக்கிய நிகழ்வுகளுக்கு மட்டும் சென்னை வந்து சென்று கொண்டிருந்தார். இப்படியான நிலையில் தற்போது கார் ரேஸ் போட்டிகள் முடிவடைந்து விட்டதால் நவம்பர் மாதத்தில் இருந்து தன்னுடைய 64வது படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்கு அவர், 160 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படும் நிலையில், 64வது படத்தில் நடிக்க 180 கோடியாக சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.