உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போலீஸ் வேடத்தில் சசிகுமார்

போலீஸ் வேடத்தில் சசிகுமார்

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் 'அயோத்தி' படத்திற்கு பிறகு 'கருடன்', 'நந்தன்', 'டூரிஸ்ட் பேமிலி' போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது அவரது கைவசமாக 'பிரீடம்', 'வதந்தி 2' (வெப்சீரிஸ்), 'எவிடென்ஸ்' ஆகிய படங்கள் உள்ளது. இந்த நிலையில் சசிகுமார் புதிய படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். இயக்குனர் செல்வராகவனின் உதவி இயக்குநர் இயக்கும் இப்படத்தில் சசிகுமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதனால் இந்த படத்திற்கு 'அதிகாரி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நெருங்கிய திரைத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !