உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு

‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் படைப்பில் உருவாகி இந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‛டூரிஸ்ட் பேமிலி'. சசிகுமார், சிம்ரன் முதன்மை வேடத்தில் நடித்தனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக லாபத்தை தந்த படங்களில் இதுவும் ஒன்று, சுமார் 90 கோடி வரை இப்படம் வசூலித்தது.

இந்த படத்தின் வெற்றிக்காக அபிஷன் ஜீவிந்திற்கு விலையுர்ந்த பிஎம்டபுள்யூ காரை பரிசளித்துள்ளார் இதன் தயாரிப்பாளர் மகேஷ் பசிலியான். தற்போது இதே தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் அபிஷன் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். இதில் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் அபிஷன், சென்னையில் வளர்ந்தவர். இவர் தனது தோழி, காதலி அகிலாவை திருமணம் செய்ய உள்ளதாக டூரிஸ்ட் பேமிலி பட மேடையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !