மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன்
தெலுங்கில் பிரபல இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்க உள்ள படத்தில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கப் போகிறார் நயன்தாரா. அந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதால், ஹீரோயினும் வெயிட்டாக இருக்க வேண்டும் என நினைத்து நயன்தாராவை புக் பண்ணியிருக்கிறார்களாம். பாலகிருஷ்ணாவின் வயது 65 என்றாலும் மறுபேச்சு இல்லாமல் நயன்தாரா சம்மதித்து இருப்பதாக தகவல்.
ஏற்கனவே சிம்ஹா, ஜெய் சிம்ஹா, ராமராஜ்ஜியம் படங்களில் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். அதில் அவர் சீதையாக நடித்த ராமராஜ்ஜியம் படம் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. தமிழில் நயன்தாராவை ஹீரோயினாக்க முன்னணி ஹீரோக்கள் முன் வரவில்லை. பெரும்பாலும் அவர் கதையின் நாயகியாக நடிக்கிறார். அதனால், தெலுங்கில் நயன்தாரா கவனம் செலுத்துகிறார். இப்போது சீரஞ்சீவி ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அடுத்து பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கப்போகிறார்.
தமிழில் அவர் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகாமல் தவிக்கின்றன. அவர் மூக்குத்தி அம்மன் 2வைதான் பெரிதாக நம்பியிருக்கிறார். தமிழை விட நயன்தாராவுக்கு சம்பளமும் அதிகம் 15 கோடிக்குமேல் சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.