உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம்

பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம்


எம்.ஆர்.ராதா நடிப்பில் வெளிவந்து இன்றளவும் பேசப்படுகிற 'ரத்தக்கண்ணீர்' படத்திற்கு பல பெருமைகள் உண்டு. அதில் அதிகம் அறியப்படாத விஷயம் என்னவென்றால், ரத்தக்கண்ணீர்தான் முதல் பிளாஷ்பேக் படம்.

பிற்காலத்தில் கதையின் கடந்த கால பகுதியை சொல்வதற்கு பிளாஷ்பேக் உபயோகப்படுத்தப்பட்டது. நாடகத்தில் செய்ய முடியாத, சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்ட ஒன்று இந்த பிளாஷ்பேக்.

ரத்தக்கண்ணீருக்கு முன்பு பல படங்களில் பிளாஷ்பேக் யுக்தி பயன்படுத்தப்பட்டிருந்தாலும், முழு படமும் பிளாஷ்பேக்காக வெளிவந்ததில் ரத்தக்கண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

தொழுநோய் பாதித்த உடலுடன் கம்பு ஊன்றிய நிலையில் பரதேசி போல் நிற்கும் எம்.ஆர்.ராதாவின் சிலை அருகில் கூட்டம் கூடிநிற்கும். அந்தக் கூட்டத்தில் இருந்துகொண்டு, எஸ்.எஸ்.ராஜேந்திரன், தன் நண்பனைப் பற்றி, தன் நண்பன் சீரழிந்தது பற்றி கதை போல் பிரசங்கம் செய்வதில் இருந்து ப்ளாஷ்பேக்காக படம் தொடங்கும்.

சினிமாவே வேண்டாம் என்று விலகிச் சென்ற எம்.ஆர்.ராதாவை, 12 வருடங்கள் கழித்து, தன் நேஷனல் பிக்சர்ஸ் 'ரத்தக்கண்ணீர்' மூலம் மீண்டும் சினிமாவுக்குக் கொண்டுவந்தார் பெருமாள் முதலியார். 1954ம் ஆண்டு தீபாவளிக்கு வந்தது 'ரத்தக்கண்ணீர்'.'பராசக்தி'யை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் -பஞ்சு தான் இந்தப் படத்தையும் இயக்கினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !