அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி!
ADDED : 48 minutes ago
கடந்த 2009ம் ஆண்டில் தெலுங்கில் கொடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி நடித்து வெளியான படம் 'அருந்ததி'. அந்த காலகட்டத்தில் குறைவான பொருட்செலவில் உருவாகி பல மடங்கு வசூலை வாரி குவித்த படம். அந்த காலகட்டத்தில் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
16 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கின்றனர் என சமீபத்தில் தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தை ஹிந்தியில் மோகன் ராஜா இயக்குகிறார். இதில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அருந்ததி படத்தின் ஹிந்தி ரீமேக்கை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என கூறப்படுகிறது.