உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ?

விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ?


கேஜிஎப் படத்தில் இரண்டு பாகங்களின் அடுத்தடுத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர் யஷ் நடித்து வரும் படம் 'டாக்ஸிக்'. நடிகையும் தேசிய விருது பெற்ற இயக்குனருமான கீத்து மோகன்தாஸ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது சில பிரச்னைகளால் தொடர்ந்து தாமதமாக நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 14ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீப காலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பல காட்சிகள் திரும்பத் திரும்ப எடுக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.

இதன் பின்னணியில் இயக்குனர் கீது மோகன்தாஸுக்கும் நடிகர் யஷ்ஷுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மீதி இருக்கும் படத்தை நடிகர் யஷ்ஷே இயக்க தீர்மானித்திருப்பதாகவும் தற்போது ஒரு தகவல் கன்னட திரை உலகில் பேசப்பட்டு வருகிறது. இங்கே தமிழில் கூட நடிகர் விஷால், தான் நடித்து வந்த 'மகுடம்' திரைப்படத்தின் இயக்குனர ரவி அரசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது மீதி திரைப்படத்தை தானே இயக்கி வருகிறார். அதே பாணியில் இயக்குனர் யஷ் கையில் எடுப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !