உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல்

கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல்


மலையாளத்தில் திரையுலகில் கடந்த 2008ல் '20-20' என்கிற படம் வெளியானது. மலையாள நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக உருவான இந்த படத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். அதேசமயம் இந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை நடிகர் திலீப் ஏற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள 'ப ப ப' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார் திலீப்.

அப்படி ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, “20-20 படத்தில் ஒரு பாடலில் பங்கேற்பதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் அந்த சமயத்தில் அவர் கொஞ்சம் பிஸியாக இருந்தார். அதன்பிறகு அவர் ஒருநாள் என்னை அழைத்து இப்போதும் அந்த பாடல் எடுக்கப்பட வேண்டி இருக்கிறதா என்று கேட்டார். ஆனால் அவர் கேட்ட சமயத்தில் நாங்கள் கிட்டத்தட்ட முழு படத்தையும் முடித்து ரிலீசுக்கு தயாராகி விட்டோம். அதனால் 20-20 படத்தில் அவரால் இடம்பெற முடியாமல் போய்விட்டது. அதில் எங்களுக்கு வருத்தமே” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !