கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்'
'அருவி, வாழ்' படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியான படம் 'சக்தித் திருமகன்'. தியேட்டர் வெளியீட்டில் சுமாரான வரவேற்பைப் பெற்ற இப்படம் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் ஓடிடியில் படத்தைப் பார்த்த பிறகு பாராட்டியுள்ளனர்.
இதனிடையே, 'சக்தித் திருமகன்' கதை தன்னுடைய கதை என்றும், அதை பிரபல தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தேன் என்றும் சுபாஷ் சுந்தர் என்பவர் இரு தினங்களுக்கு முன்பு பேஸ்புக் பதிவில் குற்றம் சாட்டியுள்ளார்.
“சக்தித் திருமகன்- திருட்டு கதை
எந்த பதவியிலும் இல்லாமல் இந்தியாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வில்லன் கேரக்டரை உருவாக்கி அதில் மாதவனை உருவகம் செய்து நான் 3 வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்திருந்த காப்பி ரைட்ஸ் வாங்கிய கதைதான் “தலைவன்”.
அதன் SNAP shotsai குடுத்துள்ளேன், படித்துப் பாருங்கள்.
மாதவன் ஒரு இந்துத்துவ பிடிப்புள்ள வில்லன், நாட்டை சர்வாதிகாரத்துக்கு கொண்டு வரத் துடிப்பவன்.
ஹீரோவின் குடும்பம் அழிய காரணமாய் இருப்பான், அவனிடம் கூடவே ஹீரோ இருப்பான், ஹீரோவுக்கு பயிற்சி அளித்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். பின் ஒரு கட்டத்தில் ஹீரோ அவனுக்கு எதிராக திரும்புவான்.
ஹீரோ தான் சேர்த்த பணத்தை பிட்காயினாக மாற்றி அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி வில்லனை எதிர்க்கிறான்.
ஹீரோ மீது நிதி மோசடி புகாரை உருவாக்குகிறான்.
ஹீரோவை தீவிரவாதியாக சித்தரிக்கிறான்.
ஹீரோ வில்லனுடைய நிறுவங்களை நஷ்டத்துக்கு உள்ளாகுவது.
ஹீரோவின் அம்மாவை விபச்சாரியாக சித்தரித்து சிறைக்கு அனுப்புவான் வில்லன் என் கதையில்.. இதிலும் அப்படி விபச்சாரியாக சித்தரித்திருப்பார்கள்..
என் கதையில் இறுதியில் வரும் வசனம் “உன்னுடைய மரணம் புரட்சியை விரும்பும் ஒவ்வொருவரையும் பயமுறுத்தும், மக்கள் கடுமையான கஷ்டம் அனுவவிப்பார்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள், உரிமைகளைப் பேச யோசிப்பார்கள், மக்களை சந்தோசப்படுத்தி ஓட்டு வாங்க வேண்டியதில்லை சர்வாதிகாரியாக நான் இருப்பேன்” என்பான் மாதவன்.
ஹீரோ என் கதையிலும் சாக மாட்டான்.. இதில் போலவே வில்லனை கொன்றுவிட்டு தப்பிப்பான்.. வெளியில் ராணுவம் நிற்க..
என் கதையை Dream warriorskku அனுப்பிய சான்று இருக்கிறது, சக்தி திருமகனின் இயக்குனர் முதல் படம் அவர்களுக்குதான் செய்தார்.. கதை இலாகா என்கிற பெயரில் , புதியவர்களுக்கு உதவுகிறோம் என்று கதையை வாங்குகிறார்கள், அதன் பின் அது எங்கே யாருக்கு எந்த வடிவில் செல்கிறது என்பது யாருக்கு வெளிச்சம்?
சும்மா விடுவதாக இல்லை, சின்ன சின்ன மாற்றங்களை செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்றால் எப்படி?
கதையை copy rights of indiavil register செய்து வைத்துள்ளேன் , டாக்குமென்ட்ஸ் எல்லாம் என்னிடம் இருக்கிறது, வருடம் 2022. தொடர்பான படங்களை பதிவிட்டுளேன். கேஸ் போடுவதாகவும் உள்ளேன்.
அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள், ஒருவரைப் போல் ஒருவர் இவ்வளவு பொருத்தங்களுடன் சிந்திக்க முடியாது, அப்படியே இருந்தாலும் முதலில் சிந்தித்து பதிவு செய்பவருக்கே உரிமை.
ஒழுக்கத்தை, நேர்மையை போதிப்பதாக படம் இருப்பதைப் போல அதை எடுப்பவர்களும் இருந்தால் நன்று.
என்று பதிவிட்டு, அதற்குரிய ஆவணங்கள் சிலவற்றையும் இணைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அடிக்கடி இப்படி கதைத் திருட்டு என்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில படங்களுக்கு மட்டுமே அதற்கு தீர்வு கிடைத்திருக்கிறது. மற்றவை இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது.