தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா
ADDED : 12 hours ago
நடிகர் சூர்யா தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யா நேரடி தெலுங்கு படங்களிலும் நடிக்க கவனம் செலுத்துகிறார். ஏற்கனவே போயப்பட்டி ஸ்ரீனு, சந்து மொண்டேட்டி போன்ற இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். சமீபத்தில் 'கீதா கோவிந்தம்', ' சர்காரு வாரி பட்டா' ஆகிய படங்களை இயக்கிய பரசுராம், சூர்யாவை சந்தித்து ஒரு கதை கூறியுள்ளார். முதற்கட்ட சந்திப்பில் சூர்யாவிற்கு கதை பிடித்துள்ளது. ஆனால், இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க வாய்ப்பு உள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.