மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி
ADDED : 56 days ago
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. அவரின் தந்தை கிருஷ்ணாவும் ஒரு காலகட்டத்தில் பெரிய ஸ்டார் ஆக வலம் வந்தவர். கிருஷ்ணாவிற்கு மகேஷ் பாபுவுடன் சேர்த்து 5 வாரிசுகள். இதில் மகேஷ் பாபு நடிகராக உள்ளார். மற்றவர்கள் தயாரிப்பாளர், இயக்குனர்களாக வலம் வருகின்றனர்.
இந்த நிலையில் மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு கதாநாயகி உதயமாகிறார். மகேஷ் பாபுவின் அக்கா மஞ்சுளா கட்டமனேனியின் மகள் ஜான்வி கட்டமனேனி விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாக நடிப்பு, நடன பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். விரைவில் இவரின் முதல்பட அறிவிப்பு வெளியாகும் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.