உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம்

ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம்


நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்ததாக, வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கும் படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்'. இந்த படத்தை இயக்குனரும் நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். கதாநாயகனாக கன்னட திரை உலகை சேர்ந்த தீக்ஷித் ஷெட்டி நடித்துள்ளார். ராஷ்மிகா கன்னட திரை உலகை சேர்ந்தவர் என்றாலும் கூட அவர் கன்னடத்தில் நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது.

இந்த நிலையில் அவர் தெலுங்கில் நடித்திருக்கும் படத்திற்கு ஒரு கன்னட நடிகரை, அதுவும் அவ்வளவு பிரபலமில்லாத நடிகரை தேர்ந்தெடுத்தது ஏன் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ராகுல் ரவீந்திரன்.

இது குறித்து அவர் கூறும்போது, “நானி நடித்த 'தசரா' படத்தில் தீக்ஷித் ஷெட்டி நடித்திருந்தார். தசரா பட விழாவின்போது தான் நான் அவரை முதன் முதலாக பார்த்தேன். அப்போதே அவரது சுறுசுறுப்பு, தன்னம்பிக்கை, கண்களில் தெரிந்த ஒரு பொறி மற்றும் ஒரு கல்லூரி மாணவனாக மதிப்பதற்கு தகுதியான தோற்றம் என எல்லாமே நான் எழுதி வைத்திருந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தது. அதனால் தெலுங்கு, கன்னட நடிகர் என பிரித்து பேதம் பார்க்கவில்லை.

அது மட்டுமல்ல, ஏன் பிரபல நடிகரை இந்த படத்தில் நடிக்க வைக்கவில்லை என்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. கதாநாயகிக்கு இணையாக கதாநாயகனுக்கும் இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக பிரபல ஹீரோக்கள் இதுபோன்ற கதாபாத்திரங்களின் நடித்தால் தங்களது மார்க்கெட் சரிந்து விடும் என்று நினைத்து ஒதுங்குவார்கள். ஒருவேளை அப்படி யாராவது பிரபல ஹீரோ இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லி இருந்தாலும் நான் சந்தோஷப்பட்டு இருப்பேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !