உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி

கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி

பஹ்ரைனில் நடந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய பெண்கள் கபடி அணியின் துணை கேப்டனாக சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த காத்திகா இருந்தார். ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இதனால் கார்த்திகாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிதியும், பாராட்டும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் கார்த்திகா மற்றும் அவரது கபடி குழுவினரின் சாதனைகளையும், கபடி விளையாட்டின் உணர்வையும் கொண்டாடும் வகையில் பைசன் படக்குழுவின் சார்பாக கார்த்திகாவிற்கு 5 லட்சமும், கண்ணகி நகர் கபடிக்குழுவிற்கு 5 லட்சமுமாக 10 லட்சத்திற்கான காசோலையை இயக்குநர் மாரி செல்வராஜ் கார்த்திகாவின் கண்ணகி நகர் வீட்டுக்கு சென்று வழங்கினார்.

'பைசன்' படம் அடிமட்டத்திலிருந்து தேசிய அங்கீகாரத்திற்கு உயர்ந்து அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரான மணத்தி கணேசன் வாழ்க்கை கதை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !