மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி
                                ADDED :  7 minutes ago     
                            
                             கன்னட சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவர் பூமி ஷெட்டி. 'ஜான்வி ஜானு' என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர் அதன்பிறகு 'சரத்துலு வர்த்திசிதி', 'கிங்டம்' ஆகிய தெலுங்கு படங்களில் நடித்தார். இப்போது 'ஹனுமன்' படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மாவின் அடுத்த படமான 'மஹாகாளி'யில் டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார்.
புராண கதாபாத்திரமான ஹனுமனைக் கொண்டு சூப்பர் ஹீரோவை உருவாக்கிய பிரசாந்த் வர்மா, இந்த படத்தில் நாட்டார் வழக்கு தெய்வமான காளியை கொண்டு சூப்பர்வுமன் கேரக்டரை உருவாக்கி உள்ளார். இதனை ஆர்கேடி ஸ்டூடியோ தயாரிக்கிறது.
“ஹனு மேன் யுனிவர்ஸிலிருந்து” என்ற டேக்லைன், இந்த படம்  புராணம் மற்றும் நவீன சினிமா இணையும் இந்தியாவின் மித்திக் சூப்பர் ஹீரோ யூனிவர்ஸை உருவாக்கும் முயற்சி என்பது தெரிய வருகிறது.