உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர்

விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர்

வீர தீர சூரன் படத்திற்கு பின் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகும் படத்தில் ஏகப்பட்ட குழப்பம். ‛மண்டேலா' பட புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரமின் 63வது படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. சில நாட்கள் படப்பிடிப்பு கூட நடந்ததாக சொன்னார்கள். பின்னர் டிராப் ஆனது. அடுத்து பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. இது விக்ரமின் 64வது படம் என்பதாலும், கதை பணிகள் முடியாததாலும் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விக்ரமின் 63வது படத்தை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதை அறிமுக இயக்குனர் போடி கே ராஜ்குமார் என்பவர் இயக்குகிறார். இவர் இதற்கு முன்பு மூன்று குறும்படங்களை இயக்கி உள்ளாராம். சாந்தி டாக்கீஸ் நிறுவனமே தயாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !