உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல்

இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல்

ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பாகுபலி : தி எபிக் என்கிற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டு 3 மணி 44 நிமிடம் ஓடும் விதமாக இன்று வெளியாகியுள்ளது. இன்னொரு பக்கம் ஏற்கனவே பாகுபலி அனிமேஷன் படமாக உருவாகி வருகிறது என்ற தகவலும் கடந்த இரண்டு வருடங்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு பாகுபலி : தி எட்டர்னல் வார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராஜமவுலி சமீபத்தில் கூறுகையில், “இது பாகுபலி படத்தின் மூன்றாம் பாகம் அல்ல. ஆனாலும் அந்த உலகத்தின் தொடர்ச்சி தான். இன்று பாகுபலி திரையிடப்படும் திரையரங்குகளில் இடைவேளையில் இந்த அனிமேஷன் பாகுபலி ட்ரைலரும் வெளியிடப்படும். கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் மிகவும் தரம் வாய்ந்த அனிமேஷன் தரத்துடன் இந்த படம் உருவாகி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !