பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள்
ADDED : 1 minutes ago
ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி மற்றும் பலர் நடிப்பில் 2015ல் வெளிவந்த 'பாகுபலி 1, 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படங்களை ஒன்றிணைத்து 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் நேற்று பான் இந்தியா படமாக வெளியிட்டுள்ளார்கள்.
படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் வந்தாலும் படத்தில் உள்ள ஒரு விஷயம் ரசிகர்களை 'டயர்ட்' ஆக்கிவிடுவதாக பலரும் கமெண்ட் செய்துள்ளனர். அது படத்தின் நீளம். 3 மணி நேரம் 30 நிமிடம் ஓடும் படம் ரசிகர்களை மிகவும் சோர்வடைய வைத்துவிடுகிறது என்பது பலரது கமெண்ட் ஆக உள்ளது. மூன்று மணி நேரம் இருந்தால் கூட தெரியாது, ஆனால், இவ்வளவு நேரம் இருப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் குறைக்கிறது என்கிறார்கள்.
நேற்றையை முதல் நாள் வசூலாக இப்படம் சுமார் 20 கோடி வரை வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.