உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்….

'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்….

அருண் பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'சக்தித் திருமகன்' படத்தின் கதை குறித்து கடந்த சில நாட்களாக கதைத் திருட்டு சர்ச்சை எழுந்தது. அப்படத்தின் கதை தன்னுடையது என சுபாஷ் சுந்தர் என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டு பெரும் சர்ச்சையானது. அதையடுத்து இயக்குனர் அருண் பிரபு, அது தன்னுடைய கதைதான் என்று மெயில் ஆதாரம் ஒன்றை வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக அவரைச் சார்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளைப் பதிவிட்டிருந்தார்கள்.

இதனிடையே, அருண் பிரபு இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான 'அருவி' படமே ஒரு எகிப்து படத்தின் காப்பி தான் என்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கூறியிருக்கிறார்கள். 2011ல் வெளிவந்த 'அஸ்மா' என்ற எகிப்து படத்தின் கதையும், 2016ல் வெளிவந்த 'அருவி' படத்தின் கதையும் ஒன்றுதான் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இரண்டு படங்களையும் பார்த்தால் அதை ரசிகர்களே எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !