உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில்

ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. அவ்வப்போது இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்தான் சுற்றி வருகின்றன.

சமீபத்தில் அப்படத்தில் நடிகை வித்யா பாலன் இணைந்ததாக ஒரு தகவல் வந்தது. தற்போது பகத் பாசில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. முதலில் அந்த வேடத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க உள்ளதாகச் சொன்னார்கள். ஆனால், அவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கத் தயக்கம் காட்டியதாகவும், தற்போது அவருக்குப் பதிலாக மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'வேட்டையன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருந்தார். தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !