வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா
ADDED : 3 minutes ago
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கான அதிகார பூர்வ கீதமான “ப்ரிங் இட் ஹோம்” பாடலை பாடகியும், நடிகையுமான ஆண்ட்ரியா பாடியுள்ளார். நகுல் அபயங்கர் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை ஆண்ட்ரியா மற்றும் நஸீப் முகம்மது எழுதியுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நாளை நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்த பாடல் உலகம் முழுக்க ஒலிக்க இருக்கிறது.
இது குறித்து ஆண்ட்ரியா கூறும்போது “இது ஒரு பாடல் மட்டுமல்ல, பெரிய கனவு காணும், கடினமாகப் போராடும், வெற்றியை வீட்டுக்கு கொண்டு வரும் ஒவ்வொரு பெண்ணிற்குமான கொண்டாட்டம்” என்றார்.