கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு
கேரள மாநில அரசு விருதுகளை தேர்வு செய்வது, கேரள மற்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்களை நடத்துவது உள்ளிட்ட பல பொறுப்புகளை கேரள மாநில திரைப்பட அகாடமி கவனித்து வருகிறது. இதன் தலைவராக இயக்குனர் ரஞ்சித் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பின் அதன் தாகத்தில் இயக்குனர் ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்த வழக்கில் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து புதிய சேர்மன் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியரும் இசையமைப்பாளருமான ரசூல் பூக்குட்டி புதிய சேர்மன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் 26 பேர் கொண்ட புதிய உறுப்பினர்களும் சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டிக்கு காலதாமதம் ஆனாலும் தற்போது கேரள அரசு இந்த பதவியை வழங்கி கவுரவித்து உள்ளது என்றே சொல்லலாம்.