உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை

ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை


கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் தர்ஷன். இவர் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்கிற கோபத்தில் அவரை கொலை செய்ததாக 2023ல் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவருடன் நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 16 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் தர்ஷன் தனது உடல் நலம் ரொம்பவே பாதிக்கப்படுவதாகவும் தனிமையில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றுவதாகவும் கூறி தனக்கு ஜாமின் வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் நீதிமன்றம் ஜாமின் தர மறுத்தது.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் நவம்பர் மூன்றாம் தேதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் இறுதிக்கட்ட விசாரணை நடத்த இருப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது. அந்த சமயத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எந்த ஒருவரும் ஆப்சென்ட் ஆகக்கூடாது என்றும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது நீதிமன்றம். அந்த வகையில் இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றே தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !