7 படங்களில் தேறியது 2 மட்டுமே: பூவையார் தரப்பு புலம்பல்
கடந்த வாரம் விஷ்ணுவிஷாலின் ‛ஆர்யன்', ரியோராஜ் நடித்த ‛ஆண்பாவம் பொல்லாதது', பூவையாரின் ‛ராம்அப்துல்லா ஆண்டனி' மற்றும் ‛மெஸன்ஜர், தடைஅதை உடை, தேசியதலைவர் தேவர் மற்றும் பாகுபலி எபிக்' என 7 படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தன. இதில் ‛ஆண்பாவம் பொல்லாதது, ஆர்யன்' படங்கள் மட்டுமே ஓரளவு வசூலை ஈட்டியுள்ளது. பெரிய வெற்றி படமாக இல்லாவிட்டாலும், படத்தின் வசூல் திருப்தி என்கிறார்கள்.
பாகுபலி எபிக் படத்துக்கும் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது. மற்ற படங்கள் தேறவில்லை. எங்கள் படத்துக்கு சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. கேபிஒய் பாலாவின் ‛காந்தி கணக்கு' படத்துக்கு ஏற்பட்ட அதே நிலை எங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. பாகுபலி எபிக் படத்துக்கு கூட அதிக தியேட்டர்கள் தருகிறார்கள். எங்களை புறக்கணிக்கிறார்கள் என்று பூவையாரின் ராம்அப்துல்லா ஆண்டனி படக்குழு புலம்புவது தனிக்கதை. இந்த வாரமும் பெரிய படங்கள் வெளிவராத நிலையில், நவம்பர் 14ல் துல்கர்சல்மான் நடித்த ‛காந்தா' படம் வருகிறது. அதுவும் தெலுங்கு பட சாயலில் இருப்பதால் சில வாரங்கள் தியேட்டர்கள் டல் அடிக்க வாய்ப்பு என்கிறார்கள் திரையுலகில்.