உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம்

'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம்


சரவண பவன் அண்ணாச்சி ராஜகோபால் வாழ்க்கையை, சச்சரவுகளை மையமாக வைத்து ‛தோசா கிங்' என்ற படம் உருவாகிறது என அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஓடிவிட்டது. ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குவார் என படத்தை தயாரிக்கிற பாலிவுட் நிறுவனமான ஜங்கிலி அறிவித்தது. சில மாதங்கள் கழித்து அண்ணாச்சி கேரக்டரில் மோகன்லால் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால், அவர் விலகிவிட, இன்னமும் தகுந்த நடிகர்கள் கிடைக்காமல் படக்குழு திணறுகிறதாம்.

மோகன்லாலுக்கு பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைக்கலாம் என்று சிலர் கூறினாலும், இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லையாம். ஜீவஜோதி வாழ்க்கை, அவர் சந்தித்த பிரச்னை, அவரின் வழக்கு பின்ணனியில் இந்த கதை உருவாக இருப்பதால், அவரிடம் முறைப்படி அனுமதி வாங்கிவிட்டார்களாம். ஆனாலும், அண்ணாச்சி குடும்பத்தினர் படத்துக்கு எதிராக கோர்ட் போகலாம். அவரை தவறாக காண்பிக்க அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதனாலும் படப்பிடிப்பு தாமதமாகிறதாம். ஜெய்பீம் படத்தில் ஒரு தரப்பினரை இயக்குனர் த.செ.ஞானவேல் தவறாக காண்பித்ததாக பிரச்னைகள் உருவான நிலையில், இந்த படத்திலும் அப்படி நடந்துவிடக்கூடாது. அது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பயந்து பலர் ஒதுங்குவதாக தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

thonipuramVijay, Chennai
2025-11-07 02:16:20

சிவகார்த்திகேயன் மிகச்சரியாக இருப்பார் ..அவருடைய உண்மையான குணத்திற்கு ஒத்த கதை