வாசகர்கள் கருத்துகள் (1)
vaalthkkal vaalga
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பிரமாண்ட அரங்கத்தில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் 60வது மணிவிழா மாநாடு நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முதல் நாளில் இசையமைப்பாளர் இளையராஜா மகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜாவின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திக் ராஜா கூறியதாவது: தருமபுரம் ஆதீனத்தின் முன்னிலையில் இசையமைப்பது எனக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மிகப்பெரிய மரியாதை கிடைத்துள்ளது சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. எனது இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசித்து நன்றாக உள்ளது என அவர் சொன்னதை ஆசிர்வாதமாக கருதுகிறேன்.
‛தருமபுரம் ஆதீனத்தின் இசை புலவர்' என்ற விருது வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்கள். இதற்கு முன்பு இந்த விருதை பாடகர் கே.ஜே யேசுதாஸ்சுக்கு வழங்கப்பட்டது. அவருக்கு பின்னர் நான் வாங்கும் போது ரொம்ப சின்னவனாக தெரிகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
vaalthkkal vaalga