ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது!
ADDED : 3 days ago
ராஷ்மிகா மந்தனா நடித்த ‛தம்மா' ஹிந்தி படம் தீபாவளிக்கு திரைக்கு வந்த நிலையில், தெலுங்கில் அவர் நடித்துள்ள ‛தி கேர்ள் பிரண்ட்' படம் வருகிற நவம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து ‛மைசா' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் ராஷ்மிகா. இந்திய அளவில் பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியிருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
புதுமுக இயக்குனர் ரவீந்திரன் புல்லே என்பவர் இயக்கும் இந்த படத்தில் பழங்குடி இன பெண்ணாக நடிக்கிறார் ராஷ்மிகா. இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியான போது அதில் ஒரு ஆக்ரோஷமான பழங்குடியின பெண் கெட்டப்பில் அவர் காணப்பட்டார். இப்படத்தில் ராஷ்மிகாவுடன் தாரக் பொன்னப்பாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.