அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்!
 
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛குட் பேட் அக்லி' படத்தில் நடித்த அஜித் குமார், மீண்டும் அவர் இயக்கும் தனது 64வது படத்திலும் நடிக்கப் போகிறார். இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பை இம்மாதம் வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டு இருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். ஆனால் அஜித் மேலும் இரண்டு மாதம் டைம் கேட்டதால் தற்போது படப்பிடிப்பை ஜனவரி மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில் அஜித் குமாரும் உறுதிப்படுத்தி இருந்தார். 
இதனால் அஜித் 64வது படத்தின் அறிவிப்பு தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி இம்மாதமே அப்படத்தின் அறிவிப்பை  வெளியிட ஆதிக் ரவிச்சந்திரன் தயாராகி வருகிறார். அதோடு நவம்பரில் படப்பிடிப்பை தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த அவர், தற்போது படப்பிடிப்பு ஜனவரிக்கு மாறி விட்டதால் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு அஜித் 64வது படத்தை வெளியிடுவதற்கும் திட்டமிட்டுள்ளார்.