உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!


ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராம்கோபால் வர்மா ஒரு திகில் படத்தை இயக்குகிறார். ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், ஜெனிலியா தேஷ்முக் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்கிறார்.

நேற்று இரவு இயக்குனர் ராம்கோபால் ஒரு புதிய அவதாரத்தில் ஒரு கதாநாயகியின் படத்துடன் ரகசிய குறிப்பை வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியது. அதோடு அது ரம்யா கிருஷ்ணன் என்று சோசியல் மீடியாவில் கமெண்ட்டும் கொடுத்து வந்தார்கள். ரசிகர்கள் யூகித்தது போலவே இன்று போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத் படத்தில் ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. அதில், திகிலான ஒரு மர்ம பின்னணியை வெளிப்படுத்தக்கூடிய அதிரடியான தோற்றத்தில் மேல்நோக்கு பார்வையுடன் காணப்படுகிறார் ரம்யா கிருஷ்ணன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !