தெலுங்கில் படம் தயாரிக்கும் சமந்தா : தமிழை புறக்கணிப்பது ஏன்
நடிகை சமந்தா தயாரிப்பாளர் ஆகி படங்கள் தயாரித்து வருகிறார். தனது டிரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக சுபம் என்ற படத்தை முதலில் தயாரித்தார். இப்போது மா இண்டி பங்காரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் சுபம் என்பது திகில் கலந்த காமெடி படம். கடந்த மே மாதம் ரிலீஸ் ஆனது. வசந்த் மரிங்காண்டி எழுதி, பிரவீன் கந்த்ரேகுலா இயக்கிய இந்தப் படத்தில், ஒரு டிவி தொடரைப் பார்த்த பிறகு மனைவிகள் விசித்திரமாக நடந்து கொள்வதை மையப்படுத்தி கதை உருவானது. இதில் கவுரவ வேடத்தில் சமந்தா நடித்தார்.
மா இண்டி பங்காரம் படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். இவர் சமந்தா நடித்த 'ஓ! பேபி' படத்தை இயக்கியவர். இந்த படத்தில் சமந்தா கதைநாயகி குல்ஷன் தேவ்வய்யா, திகாந்த் , கவுதமி, மஞ்சுஷா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த இரண்டு படங்களுமே தெலுங்கு படங்கள்.
சென்னையில் பிறந்த வளர்ந்த சமந்தா, ஏன் தமிழ் படங்களை தயாரிப்பது இல்லை. தனது தெலுங்கு படங்களை தமிழில் ஏன் டப் செய்வது இல்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. தெலுங்கில் படம் தயாரிக்க அவருக்கு உதவிகள் கிடைக்கின்றன. அது தமிழில் குறைவு. அதனால், அவர் கோடம்பாக்கம் பக்கம் வருவது இல்லை என்கிறார்கள்.