7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன்
ADDED : 3 minutes ago
ஆர்யன் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன். சென்னையில் நடந்த விழாவில் செல்வராகவன் பேசியது, ‛‛இப்போது 7ஜி ரெயின்போ காலனி 2 எடுத்து வருகிறேன். 70 %படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதில் முதல்பாகத்தில் இறந்த அனிதா கேரக்டர் இந்த பாகத்தில் இருக்கிறதா இல்லையா என்பது சஸ்பென்ஸ். அதற்கு அடுத்து புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் பார்ட் கூட எடுக்க ரெடி. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும். இப்போது பழைய படங்கள் கிளைமாக்ஸை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மாற்றி வெளியிடுகிறார்கள். ஹாலிவுட்டிலும் இது நடக்கிறது. இப்படி மாற்றக்கூடாது. இயக்குனர் உரிமையில் தலையிட்டு மாற்றக்கூடாது. படத்தை அப்படியே வெளியிடணும்'' என்றார்.