ஜிவி பிரகாஷ் 100வது படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியீடு
ADDED : 1 days ago
தமிழ் சினிமா உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ்குமார். 2006ம் ஆண்டு வெளிவந்த 'வெயில்' படத்தில் தனது 19வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார். 20வது ஆண்டில் அவரது இசையில் வரும் படமாக 'பராசக்தி', ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோருடன் தெலுங்கில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீலீலா இப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் சிங்கிளாக 'அடி அலையே' பாடல் நாளை(நவ., 6) வெளியாக உள்ளது. ஷான் ரோல்டன், தீ இப்பாடலைப் பாடியுள்ளார்கள்.
20 வருடங்கள், 100 படங்கள் என இப்படத்தின் சிங்கிள் வெளியீடு பற்றிய முதல் அறிவிப்பில் ஜிவி பிரகாஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.