உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார்

ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார்


90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். கமல்ஹாசன் தவிர்த்து அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்த இவர், இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கினார்.

இடையிடையே சில படங்களில் தலை காட்டினார். பின்னர் ஆந்திர அரசியலிலும் நுழைந்து எம்எல்ஏ, அமைச்சராக பொறுப்பு வகித்தார். 2024ல் நடைபெற்ற ஆந்திரா சட்டசபை தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். இதனையடுத்து அவர் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியுள்ளார்.

அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில், கங்கை அமரன், சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேஷ் நடிக்கும் 'லெனின் பாண்டியன்' படத்தின் மூலம்தான் கம்பேக் கொடுக்கிறார் ரோஜா. இப்படத்தில் சந்தானம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடைசியாக 2015ல் ஷாஜி கைலாஷ் இயக்கிய 'என் வழி தனி வழி' படத்தில் நடித்திருந்தார் ரோஜா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !