உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான்

''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான்


செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், ராணா பாக்யஸ்ரீ நடிக்கும் 'காந்தா' படம் நவம்பர் 14ல் ரிலீஸ் ஆகிறது. சென்னையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் துல்கர் சல்மான் பேசியது: 2019 முதல் இந்த கதையை கேட்டு வருகிறேன். ஒவ்வொரு முறையும் இயக்குனர் செல்வா 5 மணி நேரம் கதை சொல்லுவார். 10, 12 முறை இப்படிப்பட்ட மீட்டிங் நடந்திருக்கிறது. நான் சென்னையில் வளர்ந்து படித்த பையன்.

தமிழை தான் மூன்றாவது மொழியாக எடுத்தேன். மலையாளத்தை விட உங்கள் தமிழ் உச்சரிப்பு கிளியரா இருக்கிறது என்று மலையாள சினிமாவில் சொல்வார்கள். அந்த காலத்தில் சென்னையில் பல சினிமா இயங்கியது. அந்த கால ஸ்டுடியோ, செட் அந்த கால சினிமா பின்னணியில் இந்த கதை உருவாகியுள்ளது. சின்ன வயதிலிருந்து ராணாவை தெரியும். அவரும் நானும் பலமுறை சண்டையிட்டுள்ளோம், படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக தான் அந்த சண்டை. தமிழில் நான் முதலில் நடித்த 'வாயை மூடி பேசவும்' படத்தின் சிறப்பு விருந்தினராக ராணா வந்தார். இந்த படத்தில் அவருடன் நடித்தது பெரு மகிழ்ச்சி.

சமுத்திரக்கனியுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். தான் படித்த புத்தகங்கள் அந்த கால சினிமாக்களில் இருந்து நிறைய சொல்வார். சில படங்களில் நடித்தால் மன நிறைவிருக்கும், அப்படிப்பட்ட படம் காந்தா. ஹீரோயின் பாக்யஸ்ரீ நிறைய பயிற்சி எடுத்து சிறப்பாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் ரிலீஸ் ஆகிறது. பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம். டைம் மெஷின் மூலம் அந்த காலத்துக்கே சென்று வந்த உணர்வை அந்த படங்கள் தருகிறது. காந்தாவும் அப்படித்தான். இவ்வாறு துல்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !