ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை
ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. வருகின்ற நவம்பர் 15ம் தேதியன்று படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பை பிரமாண்ட விழா வைத்து வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் உங்களுக்கு பல அப்டேட்கள் காத்திருக்கிறது. ‛இன்று முதலில் பிரித்வியின் லுக்...' என்று ராஜமவுலி பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வரிசையில் முதலாக இன்று இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரித்விராஜ் கதாபாத்திர முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் கும்பா எனும் கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். நடக்க இயலாதவர்கள் பயன்படுத்தும் நவீன வாகனத்தில் பிரித்விராஜ் உள்ளார். அந்த வாகனத்தில் சூப்பர் ஹீரோ படங்களில் வருவது போன்று செயற்கையான சக்தி வாய்ந்த கைகள் உள்ளன.