அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட்
தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு குடும்பமாக விஜய் குடும்பத்தின் வாரிசு வர உள்ளார். அவரது மகன் ஜேசன் சஞ்சய் பெயரிடப்படாத படம் ஒன்றை இயக்கி வருகிறார். சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்க தமன் இசையமைக்க தயாராகி வரும் அந்தப் படத்தின் அப்டேட் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள அப்படத்தின் தலைப்பு அறிவிப்பு நாளை நவம்பர் 10ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளார்கள். ஜேசன் சஞ்சயின் அப்பா விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் முதல் சிங்கிள் 'தளபதி கச்சேரி' நேற்று வெளியானது. இந்நிலையில் அதற்கடுத்தே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தின் தலைப்பும் வெளியாக உள்ளது.
அப்பா படத்தின் பரபரப்பில் மகன் படத்தின் பரபரப்பையும் இணைத்துக் கொண்டாடும் விதத்தில் வெளியிடுவது போலத் தெரிகிறது. நாளை மகன் இயக்கும் முதல் படத்தின் தலைப்பு பற்றி அறிவிப்பையாவது அப்பா விஜய் அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகனுக்கு ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.