வாசகர்கள் கருத்துகள் (3)
வழக்கமான வடை...
நீயும் இதையெல்லாம் நம்புருய்யே
fraudu தனத்த ஆரம்பிச்சிட்டேன் நொண்டி பாருங்க அது அவனுடைய சொந்த பணமாகத்தான் இருக்கும் அது எங்க இருந்து வந்துச்சுன்னு எல்லாருக்குமே தெரியணும்
விஜய் தனது கடைசி படமாக அறிவித்துள்ள 'ஜனநாயகன்' படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யின் கடைசி படம் என்பதாலும், விஜய்யின் அரசியல் இந்த படத்தில் இருக்கும் என்பதாலும் மொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்தி உள்ளது. படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வெளியீடாக வருகிறது.
இதனால் விஜய்யின் முந்தைய படங்களை விட இந்த படத்திற்கு சினிமா வியாபார வட்டத்திலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் படம் வெளியீட்டுக்கு முன்பே லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. படத்தின் ஓடிடி உரிமம் மட்டும் 100 கோடிக்கு மேல் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை 115 கோடிக்கும், வட அமெரிக்கா உரிமை 24 கோடிக்கும் ஆடியோ உரிமை 35 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பாடல் உரிமம், தொலைக்காட்சி உரிமம், மற்ற வெளிநாட்டு உரிமங்கள், இந்தி மொழி உரிமம் என இன்னும் வியாபார வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இதுவரை 250 கோடிக்கு மேல் உரிமங்கள் கையெழுத்தாகி இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் பட்ஜெட் 400 கோடி என்கிறார்கள். ஆனால் ரீலீசுக்கு முன்பே படம் 500 கோடி வசூலித்து விடும் என்கிறார்கள். என்றாலும் விஜய்யின் மற்ற படங்களை போன்றதல்ல ஜனநாயகன் படம். முந்தைய படங்களுக்கு எந்த அரசியல் அழுத்தங்களும் இருந்ததில்லை. இந்த படம் தணிக்கை குழுவிலும், தியேட்டர் வெளியீட்டிலும் அரசியல் அழுத்தங்களை தாண்டி வரவேண்டும், அதையும் தாண்டி படம் மக்களுக்கு பிடிக்க வேண்டும் என்கிறார்கள் சினிமா வியாபார வட்டாரத்தினர்.
வழக்கமான வடை...
நீயும் இதையெல்லாம் நம்புருய்யே
fraudu தனத்த ஆரம்பிச்சிட்டேன் நொண்டி பாருங்க அது அவனுடைய சொந்த பணமாகத்தான் இருக்கும் அது எங்க இருந்து வந்துச்சுன்னு எல்லாருக்குமே தெரியணும்