50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்'
ADDED : 2 hours ago
ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'பாகுபலி 1, 2' ஆகிய படங்களை ஒன்றாக்கி 'பாகுபலி தி எபிக்' என்ற பெயரில் அக்டோபர் 30ம் தேதி வெளியிட்டார்கள். கடந்த 10 நாட்களில் அப்படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. இருந்தாலும் 50 கோடி வசூல் என்பது சிறப்பான வசூல் தான். தெலுங்கில் கிடைத்த வரவேற்பு மற்ற மொழிகளில் எதிர்பார்த்த அளவு இல்லை. மற்ற மொழிகளிலும் வரவேற்பு கிடைத்திருந்தால் 100 கோடி வசூலைத் தொட்டிருக்கலாம்.
இப்படத்தை அடுத்து அனிமேஷன் படமாக புதிய கதையுடன் 'பாகுபலி எடர்னல் வார் பாகம் 1' படம் 2027ல் வெளியாக உள்ளது.