முதன்முறையாக தமிழில் அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக நடிக்கும் 'அன்கில் 123'
பாலிவுட்டில் பிரபல இயக்குனரும், நடிகருமான அனுராக் காஷ்யப் தென்னிந்திய மொழி படங்கள் மீது, குறிப்பாக தமிழ் படங்கள் மீது தீராத ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் இமைக்கா நொடிகள் மற்றும் மகாராஜா ஆகிய படங்களில் மிரட்டலான வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தமிழில் கதையின் நாயகனாகவும் நடிக்கிறார் அனுராக் காஷ்யப்.
‛அன்கில் 123' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சாம் ஆண்டன் இயக்குகிறார். டார்லிங், 100, கூர்கா, உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டன் கடந்த வருடம் தெலுங்கில் அல்லு சிரிஷ் நடிப்பில் வெளியான பட்டி என்கிற படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது தமிழில் அனுராக் காஷ்யபை வைத்து இந்த அன்கில் 1 2 3 படத்தை இயக்குகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது..