உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகனை வாழ்த்தாத அப்பா : பேரனை உற்சாக படுத்தாத தாத்தா

மகனை வாழ்த்தாத அப்பா : பேரனை உற்சாக படுத்தாத தாத்தா

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத் தலைப்பு சிக்மா என நேற்று அறிவிக்கப்பட்டது. படத்தின் புதிய போஸ்டரும் வெளியானது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடவில்லை. சோஷியல் மீடியாவில் பெரிய அளவு ஆதரவு தெரிவிக்கவில்லை. இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தால், எங்களுக்கு எந்த அறிவிப்பு வரவில்லை. அப்பா, மகன் உறவு குறித்து சரிவர புரியவில்லை. மகன் படம் குறித்து இதுவரை விஜய் பேசவில்லை. வாழ்த்தி ஒரு அறிக்கை, வீடியோ வெளியிடவில்லை. அதை மகனும் விரும்பவில்லை. ஆகவே சிக்மா விஷயத்தில் நாங்களும் அமைதியாக இருக்கிறோம். வருங்காலத்தில் அவர் வாழ்த்தி, எங்களையும் வாழ்த்த சொன்னால் அதை செய்வோம்.

அப்பா ஆதரவு இல்லாமல் சஞ்சய் தனியாக ஜெயிக்க விரும்புகிறார் போலும். இப்போது உள்ள இளைஞர்கள் தனித்துவமாக இருக்க விரும்புகிறார்கள். விஜய் மட்டுமல்ல, அவரை அறிமுகப்படுத்தி ஆளாக்கிய எஸ்.ஏ.சந்திரசேகரன் கூட பேரன் படம் குறித்து எதையும் பேசவில்லை, இதுவரை வாழ்த்தவில்லையே என்கிறார்கள். சிக்மா பட விழாவுக்காவது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி வருகிறார்களா என தெரியவில்லை. கோலிவுட்டில் எந்த வாரிசுக்கும் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதில்லை. ஏனிந்த புறகணிப்பு என புரியவில்லை என்ற குரலும் கேட்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (4)

Anbuselvan, Bahrain
2025-11-12 13:37:35

தனித்து போராடி ஜெயித்து காட்ட வேண்டும் என்கிற நல்ல எண்ணமாக கூட இருக்கலாம். அதற்குள் இந்த மீடியா வாய்க்கு அவல் தேவைப்படுகிறது


Radhakrishnan Seetharaman, Vizag
2025-11-12 10:23:33

பெற்ற தாய்த் தந்தைக்கு மரியாதை இல்லை. கட்டிய மனைவிக்கு உண்மையாக இல்லை. பெற்றப் பிள்ளைகளுக்கு பிரயோஜனம் இல்லை. இவர் தான் நாட்டையும், மக்களையும் காப்பாற்றப் போகிறார். நம்புவோம்.


kamal
2025-11-11 23:48:04

அடுத்தகட்டமாக 43


Shekar, Mumbai
2025-11-11 20:13:27

எல்லாம் நடிப்பு, பின்புலத்தில் எல்லாம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாதவர்கள் போல் அவன் சுய முயற்சி அப்படின்னு பீலா விடுவார்கள். இந்த தம்பி அயல்நாட்டு பிரஜை அப்புவுக்கு ஒட்டு போடமுடியாது, பிரச்சாரம் செய்யமுடியாது. அதனால பிரயோஜனம் இல்லை என்று கூட ஒதுங்க வாய்ப்பிருக்கிறது