நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
'குட் பேட் அக்லி' படத்தை முடித்ததும், கார் பந்தயங்களில் பிஸியாக இருக்கிறார் நடிகர் அஜித்குமார். அவரது அடுத்தப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்கின்றனர்.
இந்நிலையில் சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில் இந்த தகவல் புரளி என தெரியவந்துள்ளது.
அதேபோல், நடிகர் எஸ்வி சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன், ஈவிபி பிலிம் சிட்டி போன்ற இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அனைத்து இடங்களிலும் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. மிரட்டல் நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.