பிளாஷ்பேக் : 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்ட முதல் தமிழ் படம்
ADDED : 50 minutes ago
1960களில் தான் இந்தியாவில் சினிமாவிற்கு சப் டைட்டில் போடும் வழக்கம் வந்தது. அது சில முக்கியமான படங்களுக்கு, குறிப்பாக வெளிநாடுகளில் திரையிடப்படும் இந்தி படங்களுக்குத்தான் ஆங்கில சப் டைட்டில்கள் போடப்பட்டது.
ஆனால் முதன் முறையாக 'கொஞ்சும் சலங்கை' படத்திற்கு 22 மொழிகளில் சப் டைட்டில் போடப்பட்டது. அதோடு முதன் முறையாக போலந்து நாட்டில் திரையிடப்பட்ட இந்திய படமும் இதுதான்.
இந்த படத்தால் கவரப்பட்ட ஒரு இங்கிலாந்து பட நிறுவனம் படத்தின் உரிமத்தை வாங்கி 22 மொழிகளில் சப் டைட்டில் சேர்த்து உலகம் முழுவதும் வெளியிட்டது.
எம்.வி.ராமன் இயக்கிய இந்தப் படத்தில் ஜெமினி கணேசன், சாவித்ரி, ஆர்.எஸ்.மனோகர், குமாரி கமலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது சாவித்ரியின் 100து படமாகும்.